நீலகிரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


மேற்குத்திசைக் காற்றின் வேகமாறுபாடுக் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுக்கா பகுதிகளில் சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. 

இதனால் அப்பகுதியில் மழை நீர் தேங்கி வெள்ளக் காடாக காட்சியளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொன்னானி நதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் பல வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. 

இந்தத் நீர் தேக்கத்தால் மக்களின் அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மழை படிப்படியாக குறைந்து வருகிறது. 

இருப்பினும், பல இடங்களில் நீர் தேக்கம் இருப்பதனால். நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடலூர் மற்றும் பந்தலூரில் கடந்த 4 நாட்களாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து இருந்தார். இந்த நிலையில், மழை காரணமாக இன்றும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today school holiday in nilgri koodalur


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->