ஓம் நமச்சிவாய கோஷத்துடன் நடைபெறும் தஞ்சை தேரோட்டம்..!
today thanjavur big temple chariat
உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று தஞ்சை பெரிய கோவில். மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இந்தக் கோவிலில் உள்ள சிற்பங்கள் முதல் கட்டிடங்கள் வரை அனைத்தும் வரலாறு பேசுமளவிற்கு உள்ளது.
இப்படி பல்வேறு சிறப்புகளைப் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஒவொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் 18 நாட்கள் சித்திரை திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டு சித்திரை கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தத் திருவிழாவின் சிகர நிகழ்வான சித்திரை தேரோட்டம் தற்போது வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, 'ஓம் நமச்சிவாய' என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
இதனை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
today thanjavur big temple chariat