தமிழகத்தில் நாளை பொது விடுமுறை - இதுதான் காரணமா? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய மக்களால் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஈகைத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்தப் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. இஸ்லாமிய இறைதூதர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக கருதப்படும் இப்ராஹிம், இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகனான இஸ்மாயிலை பலியிட துணிந்த அவரது தியாகத்தை உலகிற்கு உணர்த்தும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில், இந்த வருடம் பக்ரீத் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி சுல்தான் சலாஹுதீன் முகமது அய்யூப் அறிவித்துள்ளார். துல்ஹஜ் பிறை கடந்த 8-ம் தேதி தென்பட்டதால் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் தமிழ்நாடு அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomarrow public holiday in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->