மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தக்காளி விலை - கிலோவுக்கு எவ்வளவு? - Seithipunal
Seithipunal


மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தக்காளி விலை - கிலோவுக்கு எவ்வளவு?

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. ஏனென்றால், கனமழையால் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளதும், ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய தக்காளி வடமாநிலங்களுக்கு செல்வதுமே இதற்கு காரணம். 

வட மானொஇளங்களிலிருந்து சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 1100 முதல் 1200 டன் வரை தக்காளி வரத்து இருந்த நிலையில் இன்று இன்று 575 டன் தக்காளி மட்டுமே வந்துள்ளது. அதனால், இன்று கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளது.

நேற்று கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ20 குறைந்து ரூ.130க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தக்காளி விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். 

இதனை சரி செய்யும் விதமாக தமிழகத்தில் உள்ள 300 நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை துவங்கி உள்ளது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. 

சந்தையில் தக்காளி விலை மட்டுமல்லாமல், சின்ன வெங்காயம், பீன்ஸ், இஞ்சி, உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tomatto price increase in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->