எடப்பாடியின் வேட்புமனு தொடர்பான மேல்முறையீடு மனு - நாளை வெளியாகப்போகும் முக்கிய தீர்ப்பு.!
tomorrow hearing eps nomination case in supreme court
கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அவர் தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம், இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி, முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யும்படி, சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22-ந்தேதி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த நிலையில், இந்த மனு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது.
English Summary
tomorrow hearing eps nomination case in supreme court