தஞ்சை இளைஞர்களே ரெடியா.! நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்..!
Tomorrow private employment camp in Thanjavur
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி அளவில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் வேலை தேடும் இளைஞர்களுக்காக மாதந்தோறும் 3-வது வெள்ளிக்கிழமைகளில் சிறு அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அலுவலக வளாகத்தில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில் தஞ்சையில் உள்ள முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 100-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளன.
கல்வி தகுதி:
8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை
டிப்ளமோ,
ஐ.டி.ஐ.,
பட்டதாரிகள்.
•மேலும் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஆட்களை முகாமில் கலந்து கொண்டு நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம்.
•இதில் கலந்து கொள்பவர்கள் தங்களின் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
•மேலும்விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tomorrow private employment camp in Thanjavur