தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்.. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.!
Tomorrow Salem corporation Stop water service
சேலம் மாநகராட்சியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
சேலம் நகராட்சியில் தனிகுடிநீர் திட்டம் மேட்டூர் தொட்டில்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாளை தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணியானது மேற்கொள்ளப்படுகின்றது.
அதன் காரணமாக, நாளை மேட்டூர் தொட்டில் பட்டியிலிருந்து நகராட்சிக்கு குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும். அதனால், நாளை சேலம் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என்றும் அதனால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
English Summary
Tomorrow Salem corporation Stop water service