தமிழகத்தில் நாளையும் வேலைநிறுத்த போராட்டம் தொடரும்..தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று வேலை நிறுத்தம் காரணமாக 60% பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் நாளை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல், எரி பொருட்கள் மீதான விலை உயர்வு உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் இன்றும், நாளையும் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று முதல் நாடு முழுவதும் மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 67 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை என்றும் 33 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு உள்ளதாகவும் தமிழக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை 60 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலை நிறுத்த போராட்டம் நாளை தொடர்ந்தாலும் தமிழகத்தில் 60 சதவீத அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் நலன் கருதி நாளை வழக்கம் போல் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டதாகவும், அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படாமல் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow tamilnadu transport 60 percentage bus run


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->