ஐபிஎல் அட்டவணையில் திடீர் மாற்றம் - இதுதான் காரணமா?
ipl sheduled change
இந்தியாவில் 18 வது ஐ.பி.எல்.தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், போட்டி அட்டவணையை மாற்றி அமைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். அதாவது, ஏப்ரல் 6ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 3.30 மணிக்கு நடைபெற இருந்தது.
அன்றைய தினம், ராம நவமியாகும். ராம நவமி தினத்தில் கொல்கத்தாவில் பாஜக பேரணி நடத்த இருப்பதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அன்றைய தினம் போட்டி நடைபெற இருப்பதால் பாதுகாப்பிற்கு போலீஸ் குவிக்க முடியாத நிலை ஏற்படும்.

இதனால், 6ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியை மற்றொரு தேதிக்கு மாற்றி வைக்க ஐபிஎல் நிர்வாகத்திற்கு கொல்கத்தா போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில், இந்த ஆட்டத்துக்கான தேதி மட்டும் தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கொல்கத்தா- லக்னோ இடையிலான மோதல் ஏப்ரல் 8-ந்தேதி மாலை 3.30 மணிக்கு அதே கொல்கத்தா மைதானத்தில் நடைபெறும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.