கேக் வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் பிரமுகர் - காத்திருந்த பேரதிர்ச்சி.! - Seithipunal
Seithipunal


கேக் வாங்கி சாப்பிட்ட காங்கிரஸ் பிரமுகர் - காத்திருந்த பேரதிர்ச்சி.!

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முபாரக் அலி. இவர் ஒரு காங்கிரஸ் பிரமுகர். இவர் நேற்று காலை தனது நண்பர்களுடன் நடைபயிற்சி சென்று விட்டு, கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள தேநீர் கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு கேக் ஆர்டர் செய்து அதனை தனது நண்பர்களுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது, அந்த கேக்கில் 4 பற்கள் கொண்ட பல்செட் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரும், அவரது நண்பர்களும் தேநீர் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

இதைத் தொடர்ந்து அவர்கள் சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தத் தகவலின் பேரில், உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அந்தக் கேக் விழுப்புரம் அருகே உள்ள ராதாபுரத்தில் தயாரிக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tooth set on cake in vizhupuram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->