லாட்ஜ் மாடியில் இருந்து குதித்து சுற்றுலா பயணி தற்கொலை முயற்சி.! கன்னியாகுமரியில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரியில் சுற்றுலா வந்த கேரள வாலிபர் மனைவி மது குடிக்க பணம் தராததால் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த 50 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று காலை ரதீஷ் (30) என்ற வாலிபர், மனைவி மது குடிக்க பணம் தராததால் லாட்ஜின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி உள்ளார்.

இதைப்பார்த்த லாட்ஜில் தங்கி இருந்தவர்கள் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், அவரை உயிருடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு முதல் மாடிக்கு இறங்கி வந்த ரதீஷ், அங்கிருந்து கீழே குதித்துள்ளார்.

இதில் அவரது கால் முறிந்த நிலையில் உடனடியாக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tourist attempted suicide by jumping from the lodge floor in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->