மலைப்பகுதியில் குப்புற கவிழ்ந்த சுற்றுலா வேன்: பயணிகளின் கதி என்ன?
tourist van overturned accident 6 people injured
தேனி, சின்னமனூர் மேற்கு மலை தொடர்ச்சியில் உள்ள ஹைவேவிஸ் பகுதியில் மேகமலை, வெண்ணியார், மகாராஜன் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.
சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு வந்து இயற்கையின் அழகை ரசித்து விட்டு திரும்பி சென்று கொண்டிருந்தபோது சுற்றுலா வேன் மலைச்சாலையில் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது.
இந்த விபத்தில் வேனில் பயணித்த 22 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களில் 6 பேர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சுற்றுலா வேனை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் விசாரணையில் மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள பகுதியைச் சேர்ந்த தங்கையா (வயது 48) என்பவர் தனது உறவினர்களுடன் சொந்த வேனில் சுற்றுலா வந்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
English Summary
tourist van overturned accident 6 people injured