"சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி"....."கோவை குற்றால அருவிக்கு செல்ல அனுமதி!"
Tourists are happy allowed to go to Coimbatore Falls
2 மாதங்களுக்கு பின்னர் கோவை குற்றால அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கோவை மாவட்டம்,தொண்டாமுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியில் கோவை குற்றால அருவி உள்ளது. இந்த அருவியில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி, அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில், கோவை குற்றால அருவிக்கு வரும் நீரின் அளவு நேற்று குறைந்ததால், அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து சுற்றுலா பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.மேலும் 2 மாதங்களுக்கு பின்னர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டதால் வார இறுதி நாட்களில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
English Summary
Tourists are happy allowed to go to Coimbatore Falls