சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. ஆண்டர்சன் சாலையில் நாளை காலை 10 மணிக்கு அரசியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளதால் போக்குவரத்தில் மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆயிரம் விளக்கு பகுதிக்குட்பட்ட ஆண்டர்சன் சாலையில் நாளை (13.06.2022) காலை 10.00 மணியளவில் அரசியல் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெறவுள்ளது. எனவே காலை 10.00 மணி முதல் பிற்பகல் 15.00 மணி வரை கல்லூரி சாலை, பாந்தியன் சாலை, எத்திராஜ் சாலை, கிரிம்ஸ் சாலை, ஹடோஸ் சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை ஆகிய சாலைகளில் போக்குவதரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.

                       

எனவே வாகன ஓட்டிகள் பாந்தியன் ரவுன்டானா - பாந்தியன் சாலை, கோ-ஆப்டெக்ஸ் சந்திப்பு - எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை சந்திப்பு, கிரிம்ஸ் சாலை, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஸ்டெர்லிங் சாலை, ஆகிய சாலைகளில் இருந்து தாங்கள் செல்லும் இடங்களுக்கு ஏற்றவாறுப் பயணத்தை மாற்றி அமைத்துக் கொள்ளுமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffic change in the thousand lights area if chennai today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->