சென்னையில் போக்குவரத்து மாற்றம்! நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது.! - Seithipunal
Seithipunal


சென்னை அண்ணா சாலையில் நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்வதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

நந்தனம் சந்திப்பில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நாளை முதல் 10 நாட்களுக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

வெங்கட்நாராயண சாலையில் இருந்து சேமியர்ஸ் சாலைக்கு செல்லும் வாகனங்கள் அண்ணாசாலை மற்றும் வெங்கட்நாராயண சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, நேராக தேனாம்பேட்டை நோக்கி 200 மீட்டருக்கு மேல் சென்று டோயாட்டோ ஷோரூம் முன் “U திருப்பம்” திரும்பி தங்கள் இலக்கை அடையலாம்.

செனடாப் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை செனடாப் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி 250 மீட்டருக்கு மேல் சென்று, டொயாட்டோ ஷோரூம் முன் “U திருப்பம்” திரும்பிச் சென்று அவர்கள் சேருமிடத்தை அடையலாம்.

பாரதிதாசன் சாலையில் இருந்து தேனாம்பேட்டை செல்லும் வாகனங்கள், அண்ணாசாலை மற்றும் பாரதிதாசன் சாலை சந்திப்பில் இடதுபுறம் சென்று, சைதாப்பேட்டை நோக்கி நேராக 300 மீட்டர் தூரம் சென்று டோயாட்டோவுக்கு முன்னால் “U திருப்பம்” திரும்பி அவர்களின் இலக்கை அடையலாம்.

இந்த போக்குவரத்து மாற்றத்யிற்கு வாகன ஓட்டிகள் தகுந்த ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது சம்மந்தமாக ஆலோசனைகள் இருப்பின் dcpsouth.traffic@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Traffic diversion in Anna Salai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->