பயிற்சி நர்சை கட்டாய திருமணம் செய்த ஏஜென்ட்..போக்சோவில் தூக்கிய போலீசார்.! - Seithipunal
Seithipunal


பயிற்சி நர்சை கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி நர்சாக 17 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நர்சை கடத்தியது நாமக்கல் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்த கலெக்ஷன் ஏஜென்டான அருண்குமார் என்பது தெரியவந்தது.

மேலும் நர்சை கடத்தி சென்று வலுக்கட்டாயமாக திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதைதொடர்ந்து சிறுமியை பத்திரமாக மீட்ட போலீசார் அருண்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Training nurse forced marriage collection agent


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->