பயன்பாட்டுக்கு வந்த திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம்! பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு.!  - Seithipunal
Seithipunal


திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் ரூ. 1100 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்து ஜனவரி 2ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது. ஆனால் பணிகள் நிறைவடையாததால் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. 

தற்போது பணிகள் நிறைவு பெற்று இன்று முதல் பயன்பாட்டுக்கு வருவதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் புதிய முனையம் இன்று காலை முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. 

காலை 6 மணிக்கு, முதல் விமானமாக சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் தரையிறங்கியது. இதனை அடுத்து விமானத்தை வரவேற்கும் விதமாக தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. 

பின்னர் பயணிகளுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த புதிய முனையத்தில் இருந்து தான் உள்நாட்டு வெளிநாட்டு விமான சேவைகள் அனைத்தும் இயக்கப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy airport new terminal comes use


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->