50 அடி ஆழத்தில் சீறி பாய்ந்த கார்: உடல் நசுங்கி உயிரிழந்த கேரள தம்பதி! - Seithipunal
Seithipunal


திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ள கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்த கார் விபத்தில் சிக்கியதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். 

சுமார் 50 அடி உயரத்தில் இருந்து கார் கீழே விழுந்ததால் முழுமையாக நொறுங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில், விபத்தில் சிக்கிய தம்பதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து சென்னை சென்று கொண்டிருக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 

இந்த விபத்து காரணமாக திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து போலீசார் உயிரிழந்த தம்பதியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy Chennai highway car accident 2 dead


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->