மகன் இறந்த சிறுது நேரத்திலேயே குடும்பத்துடன் சிலிண்டரை வெடிக்கவைத்து தற்கொலை.. திருச்சியில் சோகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள பூவழங்குடி காலனி பகுதியில் வசித்து வருபவர் கௌரி. இவர் ஆசிரியை ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில், கௌரியின் இல்லத்தில் நேற்று எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து விபத்திற்குள்ளானது. 

இந்த விபத்து குடும்பத்தினர் நால்வரும் வீட்டில் இருக்கும் நேரத்தில் அரங்கேறிய நிலையில், சம்பவ இடத்திலேயே நால்வரும் பலியாகியுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் நால்வரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதில் கௌரியின் மகன் விஜயகுமார் கடந்த நான்கு மாதத்திற்கு முன்னதாக நடைபெற்ற விபத்தில் சிக்கி தற்போது கோமா நிலையில் இருப்பதும், வீட்டிலேயே வைத்த சிகிச்சை அளித்து வந்த நிலையில், விஜயகுமாரின் நிலைமை நேற்று இரவு மோசமாகியுள்ளது. 

அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்த நிலையில், விரைந்து வந்த மருத்துவ குழுவினர் சோதனை செய்ததில் விஜயகுமார் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கௌரி குடும்பத்துடன் தற்கொலை முடிவு எடுத்து இந்த சோகம் அரங்கேறி இருக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trichy family members attempt suicide gas cylinder explosion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->