திருச்சி: மனைவி குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற விவாகரத்தில் திருப்பம்.. எமனாக தொலைக்காட்சி, செல்போன்.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி வ.உ.சி நகர் பகுதியை சார்ந்தவர் அவசர ஊர்தி ஓட்டுநர் நந்தகுமார். இவரது மனைவி மற்றும் 2 மகள்கள், மகன் ஆகியோர் அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். 

இந்த தற்கொலை முயற்சியில் இளையமகள் திவ்யா மற்றும் மகன் விக்னேஷ் உயிரிழந்துவிட, நந்தகுமாரின் மனைவி மற்றும் மூத்த மகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர் மருத்துவமனைக்கு நேரில் சென்று நந்தகுமாரின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், நந்தகுமார் திடீரென கைது செய்யப்பட்ட நிலையில், அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில் நந்தகுமார் கைது செய்யப்பட்டது உறுதியானது. தனது மகள்கள், மகன் ஆகியோர் அலைபேசியில் மூழ்கியிருந்த நிலையில், மனைவி சித்ராதேவி தொலைக்காட்சியில் மூழ்கி இருந்தார். 

இதனால் ஆத்திரமடைந்த நான் கைபேசி மற்றும் தொலைக்காட்சி பெட்டிகளை பெட்டியில் வைத்து பூட்டி சாவியை வைத்துக்கொண்டேன். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் எனது மனைவி அரளிவிதையை அரைத்து குடித்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்த நிலையில், எனது குழந்தைகளுக்கும் அதனை கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நந்தகுமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trichy Woman Suicide with Children 2 Died 1 and She under Treatment 7 June 2021


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->