கடைசி நேரத்தில் யு - டர்ன் போட்ட தமிழ்நாடு!!! PM SHRI திட்டம் - தர்மேந்திர பிரதான்
Dharmendra Pradhan said that Tamil Nadu made a last minute U turn PM SHRI scheme
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 -ம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.இந்த அமர்வு தொடங்கிய உடனே, தமிழ்நாட்டுக்குக் கல்வி நிதி மறுப்பு விவகாரத்தைக் கையிலெடுத்த தி.மு.க எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.இதற்குச் சலசலப்புக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பதிலளித்தார் .

தர்மேந்திரா பிரதான்:
அதில் அவர் கூறியதாவது,"பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஹிமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. இதில் தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, தி.மு.க தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.
தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு சீர்குலைத்து வருகிறது. PM SHRI திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் அடித்தது . கடந்த ஆண்டு மார்ச் 15 -ல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. இந்த திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது.
சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டுக் கையெழுத்திட மறுத்தனர். யார் அந்தச் சூப்பர் முதலமைச்சர் எனக் கனிமொழி பதிலளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இந்தக் கருத்துக்கு நாடாளுமன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அரசியல் கட்சியினர் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Dharmendra Pradhan said that Tamil Nadu made a last minute U turn PM SHRI scheme