45 வயது ஆணுடன் ஓட்டம் பிடித்த 10-ம் வகுப்பு மாணவி! ஒரு மாதம் கழித்து நடந்த கொடூரம்!
Karnataka school girl missing case
கர்நாடகா மாநிலம், பைவளிகே பகுதியைச் சேர்ந்த பிரதீப் (வயது 42) என்பவர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளாதவர்.
அவருடைய பக்கத்திலுள்ள வீட்டில் 10-ம் வகுப்பு படிக்கும் மனைவியுடன் சகோதர பாசத்துடன் பழகி வந்ததால், அவர்களுக்கிடையேயான தொடர்பை யாரும் சந்தேகிக்கவில்லை.
இந்த நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி மாணவி திடீரென காணாமல் போனார். இதையடுத்து அவரது பெற்றோர் மாணவியின் செல்போனை தொடர்புகொண்டனர். தொடக்கத்தில் அழைப்பு சென்ற நிலையில், பின்னர் "சுவிட்ச் ஆப்" ஆனது.
மேலும், பக்கத்து வீட்டில் வசித்த ஆட்டோ டிரைவர் பிரதீப்பும் காணாமல் போக, அடுத்த சில தினங்களில், மாணவி தனது உறவினருக்கு அனுப்பிய புகைப்படங்களில், ஆட்டோ டிரைவருடன் மிக நெருக்கமாக இருக்கும் படங்கள் இருந்தன.
இதனால் மாணவியின் பெற்றோர், அவர் பிரதீப்புடன் சென்றிருப்பதாக உறுதி செய்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மேலும், ஆட்குணர்வு மனு தாக்கல் செய்ய, அதன் பெயரில் நீதிமன்றம் போட்ட உத்தரவின்படி போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் இறங்கினர்.
இந்நிலையில், இருவரின் செல்போன் சிக்னல் காட்டுப்பகுதியில் இருப்பது தெரியவந்தது. உடனடியாக வனப்பகுதியில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டபோது, மாணவி மற்றும் பிரதீப் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்திருந்தனர்.
சம்பவ இடத்தில் தற்கொலை கடிதம் எதுவும் இல்லை. ஆனால் இருவரின் செல்போன்கள், ஒரு கத்தி மற்றும் சாக்லேட் போன்ற பொருள்கள் மட்டும் கிடைத்தன.
மாயமான 25 நாட்களுக்கு பிறகு இருவரும் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Karnataka school girl missing case