தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள்! கனிமொழி கண்டனம்! பின்வாங்கிய மத்திய அமைச்சர்!
Budget session DMK BJP National Education Policy Dharmendra Pradhan Kanimozhi
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியதும், தமிழ்நாட்டுக்கான கல்வி நிதி மறுப்பு விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதற்குப் பதிலளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் தேசிய கல்விக் கொள்கை (NEP) ஏற்கப்பட்டுள்ளது.
NEP மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பதும் தவறான குற்றச்சாட்டு. தமிழ்நாட்டில் திமுக அரசியல் நோக்குடன் மாணவர்களை தவறாக வழிநடத்துகிறது." என தெரிவித்தார்.
மேலும் அவர், "தமிழ்நாடு அரசு மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. தமிழ்நாடு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்" என்று கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்தார்.
இதற்கு பதிலளித்த திமுக எம்.பி. கனிமொழி, "மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு எவ்விதத்திலும் ஏற்காது. திமுக எம்.பி.க்கள் இதனை ஏற்கக் கூறியதில்லை. தமிழ்நாடு எம்.பி.க்கள் மற்றும் மக்களை நாகரீகமற்றவர்கள் என கூறியமை புண்படுத்தியுள்ளது. இதற்காக அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, "தமிழ்நாடு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள்" எனக் கூறியது குறித்து தனது வார்த்தைகளை திரும்பப் பெறுவதாக தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தார்.
English Summary
Budget session DMK BJP National Education Policy Dharmendra Pradhan Kanimozhi