திருப்பூர்: நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி! குழந்தைகள் உட்பட 8 பேர் படுகாயம்! 10 வீடுகள் சேதம்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் பலி ஆகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

மேலும் இந்த வெடி விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த நாட்டு வெடிகுண்டு விபத்தில் 10 வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கார்த்திக் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து மேலும் ஏராளமான நாட்டு வெடிகுண்டுகள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு வெடித்த வீடு சுக்கு நூறாக உடைத்து சேதம் அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த நாட்டு வெடிகுண்டுகள் எதற்காக இங்கு வைக்கப்பட்டன. யாரேனும் கொலை செய்ய இங்கு இந்த வெடி நாட்டு வெடிகுண்டுகளை  வைத்துள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Trippur Local Bomb Blast 8 people injury one death


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->