#தமிழகம் | இளம்பெண் கழுத்தறுத்து கொலை! நாடக காதலனின் கொடூர செயல்! - Seithipunal
Seithipunal


திருப்பூரில் இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, நாடக காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூரை சேர்ந்த சத்யஸ்ரீ என்ற 20 வயது இளம்பெண், குமார் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்துள்ளார்.

இவரும் அதே பகுதியை சேர்ந்த நரேந்திரன் என்ற 25 வயது வாலிபரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவம் நடந்த இன்று, சத்திய ஸ்ரீ வழக்கம் போல மருத்துவமனையில் தனது பணியில் இருந்தார்.

அப்போது மருத்துவமனைக்கு வந்த நரேந்திரன், வாக்குவாதம் செய்ததாக சொல்லப்படுகிறது.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நரேந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யஸ்ரீயின் கழுத்தை அறுத்து உள்ளார். தொடர்ந்து நரேந்திரனும் அதே கத்தியால் தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

இதனை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு சத்யஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆபத்தான நிலையில் நாடக காதலன் நரேந்திரனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

திருப்பூர் நகரில் பட்டப்பகலில் இளம் பெண்ணை மருத்துவமனை புகுந்து நாடக காதலன் ஒருவன் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tripur Drama Lover murder in young girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->