வெடிகுண்டை வீசி தப்பிக்க முயற்சி.. பிரபல ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்!
Trying to escape by throwing a bomb Police arrest famous gangster
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்த பிரபல ரவுடி 'பாம்' சரவணன் கைது செய்யப்படுள்ளான்.
கடந்த ஆண்டு சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டு வந்தவர், பிரபல ரவுடி 'பாம்' சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டவுடன் 'பாம்' சரவணன் சென்னையில் இருந்து தலைமறைவான அவர் மீது 6 கொலை வழக்குகள் உள்பட 33 வழக்குகள் உள்ளன.
இதையடுத்து கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் அவனை பிடிக்க பிடிவாரண்டு நிலுவையில் உள்ளது. இதையடுத்து திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இவருக்கு பிடியாணை நிலுவையில் இருந்ததால் புளியந்தோப்பு போலீசாரும் இவரை கைது செய்ய தேடி வந்தனர்.
இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்பேரில் சென்னை ரவுடி ஒழிப்பு போலீசார் அவரை டெல்லி உள்பட பல இடங்களில் தேடிவந்த நிலையில் . 'பாம்' சரவணன் சென்னை எம்.கே.பி. நகரில் உள்ள ஒரு குடோனில் பதுங்கி இருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று அவரை சுற்றி வளைத்தனர்.அப்போது அவர் போலீசார் மீது நாட்டு வெடிகுண்டை வீசி தப்பிக்க முயன்றார் . அப்போது அதில் சப்-இன்ஸ்பெக்டர் மணி படுகாயம் அடைந்தார்.
உடனே போலீசார் ரவுடியை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் வலது காலில் காயம் அடைந்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Trying to escape by throwing a bomb Police arrest famous gangster