வாய்ப்பே இல்லை! சிக்கலில் டிடிஎஃப் வாசன்! கால் வைத்த இடமெல்லாம் கண்ணிவெடி! - Seithipunal
Seithipunal


மதுரையில் செல்போன் பேசியபடி காரை அஜாக்கிரதையாக ஒட்டியதாக யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், தற்போது ஜாமீனில் வெளியே வராத அளவுக்கு ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிவேகப் பயணம், இளைஞர்களை தவறான வழிக்கு முன்னெடுத்தும் செயல் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளான பைக் ரேசர் டிடிஎஃப் வாசன், வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருசக்கர வாகனத்தை ஓட்டுவதற்கு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இதனை அடுத்து டிடிஎப் வாசன் தனது கார் மூலம் பல ஊர்களை சுற்றி வருகிறார். மேலும் தனது பெயரில் வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்து வருகிறார். மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

ஆனால், கால் வைக்கும் இடம் எல்லாம் கண்ணிவெடி என்பது போல் டிடிஎஃப் வாசன் என்ன செய்தாலும் அவர் மீதான விமர்சனங்களும், அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி புகாரும் எழுந்த வண்ணமே இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த 15 ஆம் தேதி மதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் காரை கவனக் குறைவாக, பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசிக்கொண்டே டிடிஎஃப் வாசன் ஒட்டியதாக  மதுரை அண்ணா நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, நேற்று இரவு அவரை கைது செய்தனர்.

இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே வேகமாக வாகனத்தை ஓட்டுதல், விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுதல், விதிகளை மீறியது உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது மரணம் ஏற்படுத்தும் வகையில் ஒரு செயலை செய்தல் என மற்றொரு பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் காரணமாக டிடிஎஃப் வாசனுக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTF Vaasan Case details may 2024


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->