என்ன நடந்தது தெரியுமா.? எங்க லைப் தான் போகும்.. வாக்குவாதம் செய்த TTF வாசன் மீது வழக்கு பதிவு.!! - Seithipunal
Seithipunal


சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடி.எஃப் வாசன் பயணம் செய்த கார் முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்து இறங்கிய டிடிஎஃப் வாசன் விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார்.

டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் மஞ்சள் வீரன் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியான நிலையில் படப்பிடிப்புக்காக சென்னையில் தங்கியுள்ளார். இந்த நிலையில் டி.டி.எஃப் வாசன் இன்று காலை சென்னையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் சிவப்பு நிற காரின் இன்று காலையில் தனது நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது திடீரென கார் மோதியுள்ளது. இதில் இரு சக்கரவாகனம் ஓட்டி வந்த நபர் கீழே விழுந்ததில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விபத்து ஏற்பட்டபோது அங்கு இருந்த நபர் ஒருவர் டி.டி.எஃப் வாசனை வீடியோ எடுத்துள்ளார். அந்த நபரிடம் "என்ன நடந்துச்சு தெரியுமா..? என்ன நடந்துச்சுன்னு நீங்க வீடியோ எடுக்குறீங்க..? எங்க லைப் தான் போகும்.." என டி.டி.எஃப் வாசன் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTFVasan argues with person who take video at car accident place


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->