கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம்! உயிரோடு விளையாடும் தமிழக நெடுஞ்சாலைத்துறை! - Seithipunal
Seithipunal


விருதுநகரில் மழைநீர் தேங்கியிருந்த பள்ளத்தில் கைக்குழந்தையுடன் தவறி விழுந்த பெண் காயம் அடைந்த நிலையில், பொதுமக்களின் உயிரோடு விளையாடும் தமிழக நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்று, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறையால் சாலை அகலப்படுத்தும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த மழைநீரில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் விழுந்து காயமடைந்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன.  

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு முறையான முன்னறிவிப்பின்றியும், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்றியும் நடைபெறும் சாலைப்பணிகளால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து பலமுறை சுட்டிக்காட்டியும், அலட்சியப் போக்குடன் செயல்படும் நெடுஞ்சாலைத்துறையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. 

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் சாலை மற்றம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மூடப்படாமல் இருப்பதால் அதில் தேங்கி நிற்கும் மழைநீர் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. 

எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே நெடுஞ்சாலைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதோடு, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று, தமிழக அரசை டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Condemn to TNGovt Viruthunagar incident


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->