கோழி திருடர்களை மாட்டிவிட்ட சிசிடிவி.. இளம்பெண்ணுக்கு வீடு தேடி வந்த மிரட்டல்.!
tuticorin cctv home owner get warning by thief
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி பகுதியை சேர்ந்த மேற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார்.
இவருடைய மனைவி லாவண்யா தனது தாயாருடன் வசித்து வருகிறார். லாவண்யா வீட்டின் அருகே . கடந்த சில தினங்களுக்கு முன்பு கோழி திருடு போய்விட்டதாக, தெறிந்த நிலையில் லாவண்யா தன்னிடம் இருந்த சிசிடிவி காட்சிகள் போலீசாரிடம் கொடுத்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இரவில் லாவண்யா வீட்டின் அருகே சிலர் பட்டாசுகளை வெடித்து அவர்களிடத்திலே கலவரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இதனையடுத்து லாவண்யா மற்றும் அவரது தாய் இதனை தட்டி கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அரிவாள் கத்தி என பயங்கர ஆயுதங்களுடன் அவர்களை மிரட்டியுள்ளார்கள்.
அதுமட்டுமின்றி லாவண்யா வீட்டின் சுவர் மீது ஏறிக்குதித்த அந்த நபர்கள், வீட்டில் நின்று கொண்டிருந்த காரின் மீது ஏறி நின்றுகொண்டு போலீசாரிடம் ஏன் சிசிடிவி காட்சிகளை கொடுத்தாய் என மிரட்டி கத்தி விட்டு சென்றனர்.
அதன்பின்னர் லாவண்யா அளித்த புகாரின் அடிப்படையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் மகேந்திரன்,மருதுபாண்டி மற்றும் பூபேஷ் உள்ளிட்டோரின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
tuticorin cctv home owner get warning by thief