ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறா? - கமலுக்கு பதிலடி கொடுத்த தவெக.!
tvk answer to kamal speech
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்றக் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் கட்சித் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இதனால் முதலாம் ஆண்டு விழாவை விமரிசையாக கொண்டாட த.வெ.க. நிர்வாகிகள் முழு வீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த விழா வருகிற 26-ந்தேதி ஈ.சி.ஆர். சாலையில் உள்ள Confluence Centre-ல் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்காக சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தவெக, தேர்தலுக்கான பணிகளை தொடங்கும்படி தவெக தலைவர் விஜய் தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் தவெக இணை செய்தி தொடர்பாளர் ரமேஷ் "எம்ஜிஆர் போன்று ரசிகர்களை வாக்காளர்களாக மாற்றி விஜய் வெற்றி பெறுவார்" என்று தெரிவித்தார். ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பதிலடி கொடுத்துள்ளது.
English Summary
tvk answer to kamal speech