தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி நடக்கும்!  - Seithipunal
Seithipunal


வரும் 23ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் மாநாடு நடத்த தமிழக வெற்றிக் கழகம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த மாண்டு நடக்குமா? நடக்காதா என்று விவாதம் செய்யும் அளவிற்கு வலிமையான அரசியல் தலையீடு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்த நிலையில், த.வெ.க மாநாடு நடந்த அனுமதி கிடைப்பதில் சிக்கல் அல்லது கால தாமதம் ஏற்பட்டால், மாற்று தேதி குறிப்பதற்காக ஜோதிடரை புஸ்ஸி ஆனந்த் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

மேலும், அந்த தகவலின்படி, அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல என விஜய் முடிவு செய்து உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால், ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போகவும் வாய்ப்பு உள்ளதாகவும் வெளியான அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதக்கிடையே, விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன்ம்,  தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்திற்கு, 21 கேள்விகள் அடங்கிய கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், இந்த மாநாடு நடத்துவதற்கு என்ன ஏற்பாடுகள் நீங்கள் செய்துள்ளீர்கள்? மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? 

பாதுகாப்பு அரண், பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? மாநாட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள மேடையின் நீளம், அகலம் எவ்வளவு? மொத்த இருக்கைகளின் எண்ணிக்கை எவ்வளவு? என மொத்தம் 21 கேள்விகளை அந்த கடிதத்தில் கேட்டு, அதற்கு பதில் அளிக்க தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மாநாடு நடக்குமா? நடக்காதா? மாநாடு நடத்த விடாமல் பிரபல அரசியல் கட்சி சூழ்ச்சி செய்து வருகிறதா? என்று விஜய் ரசிகர்கள் மற்றும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் குழப்பமான மனநிலையில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு திட்டமிட்டபடி வரும் 23ம் தேதி நடைபெறும், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தகவல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TVK BussyAnand TVK Maanadu 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->