தவெகவில் 120 மாவட்ட செயலாளர்கள் நியமனம்.!
tvk leader vijay announce district secretary
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கி 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். இதற்காக, மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், த.வெ.க. கட்சிக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று நேர்காணல் நடைபெற்றது. இதன் முடிவில் தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதாவது, நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என 15 பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு தலைவர் விஜய் தனது உருவம் பொறித்த வெள்ளி நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார்.
English Summary
tvk leader vijay announce district secretary