த.வெ.க வாக்குச்சாவடி நிர்வாகிகள் கருத்தரங்கு - தலைவர் விஜய் கோவை வருகை.!
tvk leader vijay come in coimbatore for booth committee meeting
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். இந்த நிலையில், அவர் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கை நடத்தவுள்ளார்.
அதன்படி கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோயம்புத்தூர் அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் நடத்தவுள்ளார்.

இந்தக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் கோவைக்கு வருகை தந்துள்ளார். மதியம் மூன்று மணிக்கு கருத்தரங்கு நடைபெறும் இடத்துக்கு வரும் அவர், கருத்தரங்கில் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார். இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கிலும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தத் கருத்தரங்கில் த.வெ.க.வை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
English Summary
tvk leader vijay come in coimbatore for booth committee meeting