கேள்வி கேட்டால் மன்னராட்சி முதல்வருக்கு ஏன் கோபம் வருகிறது..? - பொதுக்கூட்டத்தில் வெளுத்து வாங்கிய விஜய்.!!
tvk leader vijay speech about mk stalin in public meeting
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உறுதிமொழியுடன் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தில் 17 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த பொதுக்குழுவில் பேசிய தலைவர் விஜய், “அரசியல் சூறாவளி, தேர்தல் சுனாமியை யாராலும் தடுக்க முடியாது. அடிப்படை கொள்கையில் தவெக உறுதியாக இருக்கும். எந்த கட்சிக்கும் இல்லாத நெருக்கடியை எங்கள் கட்சிக்கு மட்டும் கொடுக்கிறார்கள்.

இப்போது வரை இடையூறு வந்து கொண்டுதான் இருக்கிறது. காற்று, மழை என்று இயற்கையை எப்படி யாராலும் தடுக்க முடியாதோ, அதேபோல் தவெகவையும் யாராலும் தடுக்க முடியாது. மக்களின் அனைத்து போராட்டங்களுக்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதுணையாக இருக்கும். அரசுக்கு எதிரான அனைத்து போராட்டங்களிலும் தவெக நிற்கும்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கே சரியில்லை. இதற்கு காரணம் இந்த கரெக்ஷன் கபடதாரிகள் தான். கேள்வி கேட்டால், விமர்சித்தால் மன்னராட்சி முதல்வருக்கு ஏன் கோபம் வருகிறது..? தமிழ்நாடு அடுத்தாண்டு வித்தியாசமான தேர்தலை சந்திக்கும். இரண்டு கட்சிகளுக்கு இடையே மட்டும் தான் போட்டி இருக்கும். அது தவெக – திமுக” என்று பேசினார்.
English Summary
tvk leader vijay speech about mk stalin in public meeting