தவெக மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி மறுப்பா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
TVK Maanadu Vilupuram SP
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி மறுப்பு என்ற செய்தி தவறானது என்று, விழுப்புரம் எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். தொடர்ந்து கடந்த மாதம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தி இருந்த நடிகர் விஜய், இந்த மாதமே கட்சியின் முதல் மாநாடு நடைபெறுவதாக தெரிவித்திருந்தார்.
ஆனால், காவல்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும் விதித்ததால் மாநாடு உடனடியாக நடத்த முடியாமல் தள்ளி போவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெற உள்ளதாக, அக்கட்சியின் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
இதனை அடுத்து விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடக்க உள்ள மாநாட்டுக்கு அனுமதி மற்றும் பாதுகாப்பு கேட்டு காவல்துறையிடம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறக்கூடிய 27ஆம் தேதி தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அனுமதி கேட்டு தீயணைப்பு, ரயில்வே நிர்வாகத்திடம் அனுமதி கேட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதிக்கோரிய நிலையில் நிபந்தனைகள் குறித்து பேசி வருகிறோம் என்றும் எஸ்பி தீபக் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு போலீஸ் அனுமதி மறுப்பு என்ற செய்தி தவறானது என்றும், விழுப்புரம் எஸ்பி விளக்கம் அளித்துள்ளார்.
இதேபோல, மாநாட்டுக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை என்ற செய்தி தவறானது என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.