தவெக கட்சி அலுவலகம் அகற்றம் - காரணம் என்ன?
tvk office remove in thiruvallur
இந்தியாவில் பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டுவதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தின் திருவள்ளூர் நகரில் கடந்த சில காலமாகவே போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.
இதை சரிசெய்வதற்காக சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் மற்றும் கடைகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், பத்தியால்பேட்டை என்ற இடத்தில் கட்டப்பட்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞரணி சார்பில் கட்டப்பட்ட அலுவலகம் பொது இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்ததால், நெடுஞ்சாலைத்துறை இடித்து அகற்றியது.
முன்னதாகவே இந்த அலுவலகம் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இடித்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்தில் தவெகவினர் கூடியதால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
tvk office remove in thiruvallur