ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பனையூர் வரவைத்து தவெக விஜய் நிவாரண உதவிகள்! - Seithipunal
Seithipunal


ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் வீடுகளை இழந்து வேதனையிலிருக்கும் நிலையில், அரசியல் தலைவர்களும் சமூக ஆர்வலர்களும் நிவாரண நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கியிருக்கின்றனர்.

இந்தச் சூழலில், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் மற்றும் பிரபல நடிகர் விஜய் தனது உதவிகளை வழங்கிய நிகழ்வு சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபெஞ்சல் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களை, சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்திற்கு அழைத்து, அவர் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

விஜய் வழங்கிய நிவாரணப் பொருட்கள்: வேஷ்டி,சட்டை,பெட்ஷீட்.,மளிகை சாமான்கள் இவை ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவைப்படும் அத்தியாவசிய தேவைகளைச் சாத்தியமாக்கும் வகையில் விநியோகம் செய்யப்பட்டது.

விஜயின் சமூகப் பணிகள் தொடர்ந்து பாராட்டுக்களைப் பெறுவதோடு, அவரது நடத்திய இந்த நிவாரண நடவடிக்கை பலருக்கும் உதவியாக இருந்தது. புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் ஆதரவையும் வழங்கும் இந்த செயல் மற்றவர்களுக்கும் முன்மாதிரியாக அமைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tvk Vijay relief aid by bringing people affected by Fenchal storm to Panayur


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->