ராமஜெயம் வழக்கில் திடீர் திருப்பம்... உண்மை கண்டறியும் சோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
Twist in fact finding trial of the Ramajayam murder case
திமுக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக நடத்தப்பட்ட உண்மையாடி கண்டறியும் சோதனையின் அறிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களின் பட்டியலில் திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேஷ், தினேஷ், சத்யராஜ், செந்தில், கலைவாணன், திலீப், சுரேந்தர், சாமி ரவி, சிவா, ராஜ்குமார், மாரிமுத்து உள்ளிட்ட 12 பேர் மீது சந்தேகம் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சந்தேகிக்கும் நபர்கள் மீது உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என விசாரணை குழு சார்பில் கேட்டுக் கொண்டதை அடுத்து நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
இதனை அடுத்து கடந்த ஜனவரி 18ம் தேதி முதல் ஜனவரி 21ம் தேதி வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் அறிவியல் சோதனை கூடத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை மூலம் பெறப்பட்ட அறிக்கையின் விவரங்கள் தற்பொழுது வெளியாகி உள்ளது.
இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 12 பேரில் 11 பேர் பொய்யான தகவலை உண்மை கண்டறியும் சோதனையும் பொழுது கூறி இருப்பதாக அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த சோதனையில் திலீப் என்பவர் மட்டுமே உண்மையை கூறி இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் சோதனை மூலம் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பேர் பொய்யான தகவல் கூறி இருப்பது ராமஜெயம் கொலை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Twist in fact finding trial of the Ramajayam murder case