ரூ.1.20 கோடி மோசடி! சதுரங்கவேட்டை படபாணியில் ஆசை காட்டி அல்வா குடுத்த மர்ம நபர்கள் கைது! - Seithipunal
Seithipunal


சென்னை : பல் மருத்துவரிடம் ஆன்லைனில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறி ரூ.1.20 கோடி மோசடி செய்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் குழு ஒன்றில் தகவல் பரவியது. இது தொடர்பாக விளம்பரம் ஒன்று வெளியானது. இதைப் பார்த்து சென்னை வானகரத்தில் வசிக்கும் பல் மருத்துவர் ஒருவர் இதைப் பற்றி விசாரித்துள்ளார். இது தொடர்பாக, செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் முதலீடு செய்யலாம் என்று மர்ம நபர்கள் சிலர் ஆசை காண்பித்துள்ளார்கள்.

இதனை  உண்மை என்று நம்பிய பல் மருத்துவர் பல்வேறு சந்தர்ப்பங்களில்  கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்து மொத்தமாக ரூ.1.20 கோடி ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் பணம் போட்டுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி லாபம் எதுவும் கிடைக்கவில்லை. முதலீடு செய்த பணத்தையாவது திருப்பிப் பெறலாம் என்று டாக்டர் முயற்சி செய்து பார்த்துள்ளார்.

பணத்தை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதை கண்டு தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பல் மருத்துவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், மோசடியில் ஈடுபட்டதாக திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் மற்றும் சதீஷ் ஆகிய 2 பேரை நேற்று காவல்துறை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ23.80 லட்சம் ரொக்கபணம் மற்றும் 2 தங்கச் செயின்கள் உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலில் செய்தால் அதிக பணம் ஈட்டலாம் என்று ஆசை வார்த்தை கூறி பல் மருத்துவரிடம் ரூ 1.20 கோடி மோசடி செய்த 2 நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two arrested for online fraud on dentist


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->