சென்னையில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம் - எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?  - Seithipunal
Seithipunal


சென்னையில் ஐந்து நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-

"புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் குடிநீர் பிரதான குழாய் இணைக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்கிறது. அதனால் இன்று காலை 8 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்டலம் 4 தண்டையார் பேட்டை பகுதிகள், மண்டலம் 5-க்கு உட்பட்ட புரசைவாக்கம், பெரியமேடு, சவுகார்பேட்டை, எழும்பூர், சிந்தாதிரிபேட்டை, மண்டலம் 6-க்கு உட்பட்ட ஓட்டேரி, அயனாவரம், பெரம்பூர், செம்பியம், மண்டலம் 8-க்கு உட்பட்ட புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், மண்டலம் 9-க்கு உட்பட்ட திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளுக்கு குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அவசர தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் https://cmwssb.tn.gov.in என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two days water supply stop in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->