தமிழகத்தில் மட்டும் 208 பேருக்கு பணி நியமனம்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூன் மாதம் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்குமாறு பிரதமர் மோடி மத்திய அரசின் அனைத்து துறைகளையும் கேட்டுக் கொண்டார். இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மாதம் தொடங்கி வைத்து, நாடு முழுவதும் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். 

இதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக இன்று நாடு முழுவதும் 71 ஆயிரம் பேருக்கு காணொளி மூலமாக பிரதமர் மோடி பணி நியமனங்களை வழங்கினார். அதே சமயத்தில், இதர மாநிலங்களில் உள்ள மத்திய அமைச்சர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணி நியமனங்களை வழங்கினர். 

அந்தவகையில், இன்று சென்னை ஆவடியில் உள்ள சி.ஆர்.பி.எப். மைதானத்தில் நடைபெற்ற பணி நியமன விழாவிற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார்.

இந்த விழாவில் தபால்துறை, மருத்துவ துறை மற்றும் வங்கி பி.எஸ்.எப். போன்ற துறைகளை சேர்ந்த 208 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய அமைச்சர் எல்.முருகன் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில், சி.ஆர்.பி.எப். துறையின் டி.ஐ.ஜி. தினகரன் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two hundrand and eight peoples appointed in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->