சினிமா பாணியில் சீறிய தமிழக போலீஸ் - கையும் களவுமாக சிக்கிய கொள்ளையர்கள்..!
two north state mans arrested for robbery in chennai
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் நகைப்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அப்படி கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுபவரை காவல்துறையினர் கைது செய்தாலும், தொடர்ந்து அந்த சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை விமானத்திற்குள் வைத்து போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் விமானத்திற்குள் புகுந்து கைது செய்து வெளியே அழைத்து வந்தனர். போலீசார் விமான நிலைய அதிகாரிகளைத் தொடர்புக்கு கொண்டு, கொள்ளையர்களை தப்ப விடாமல் துரிதமாக செயல்பட்டு பிடித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் சைதாப்பேட்டை, வேளச்சேரி, நீலாங்கரை உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
English Summary
two north state mans arrested for robbery in chennai