சென்னை : அண்ணா நகர் காவல் நிலையத்தில் மதுபோதையில் ரகளை செய்த வடமாநில பெண்கள்.!
two north states womans rude with drunks anna nagar police station in chennai
சென்னை : அண்ணா நகர் காவல் நிலையத்தில் மதுபோதையில் ரகளை செய்த வடமாநில பெண்கள்.!
சென்னை அண்ணா நகரில், தனியாருக்கு சொந்தமான மதுபான பார் ஒன்று உள்ளது. இந்த பாரில் வடமாநிலத்தை சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் மது அருந்தி உள்ளனர். இதையடுத்து இவர்கள் இருவரும் போதையில் பாரில் இருந்து வெளியேற மறுத்ததால் பார் ஊழியர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே விரட்டியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த இருவரும் சாலையில் சத்தம் போட்டுள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் எச்சரித்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் பெண்கள் இருவரும் வீட்டிற்கு செல்லாமல் அருகில் இருந்த அண்ணா நகர் காவல் நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த போலீசாரிடம் பார் மீது புகார் அளிக்க வேண்டும் என்று போதையில் கூச்சலிட்டனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை விசாரணை செய்ய முயன்ற போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டு அங்கிருந்த பொருட்களை தூக்கி வீசி அட்டகாசம் செய்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் பெண்கள் குறித்து நடத்திய விசாரணையில், அவர்கள் மிசோரம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
மேலும், போலீசார் பெண்களின் செல்போனில் இருந்து சூளைமேட்டை சேர்ந்த பெண்னை அழைத்து அவரிடம் போதையில் இருந்த இரண்டு பெண்களையும் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
two north states womans rude with drunks anna nagar police station in chennai