திருவிழாவில் ஏற்பட்ட தகராறு! 2 பேர் கொலை! மேலும் ஒருவருக்கு கத்திக்குத்து! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி அருகே கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில்  இரண்டு பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை திசையன்வினை அருகே கோவில் கொடை விழாவில் தகராறு ஏற்பட்டுள்ளது. தரம் பாடு அருகே நடந்த கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் இருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவில் திருவிழாவில் ஏற்பட்ட இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த கொலைகள் சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் திருவிழாவில் பங்கேற்றவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு இரண்டு பேர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Two people were stabbed to death in a dispute at a temple festival near Tirunelveli


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->