நாமக்கல் || சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இருவர் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


நாமக்கல் மாவட்டம் கொசவம்பட்டி வ.உ.சி நகரை சேர்ந்தவர் பகவதி. நாமக்கல் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவர் நேற்று இரவு 7 மணி அளவில் நாமக்கல் பேருந்து நிலையம் எதிரே உள்ள கருணாநிதி ஹோட்டலில் 6 சிக்கன் ரைஸ் பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். 

அதில் இரண்டை தனது தம்பி ஆதியிடம் கொடுத்து தனது தாத்தா சண்முகநாதத்திற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். மீதம் உள்ளதை அவரது அம்மாவிடம் கொடுத்துள்ளார்.
அதன் படி பகவதியின் தாய் நதியா அந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டபோது அதில் வேறொரு வாடை தெரிந்தது. உடனே சந்தேகமடைந்த நதியா தனது தந்தைக்கு போன் செய்துள்ளார். அதற்குள் அவர் சிக்கன் ரைஸை சாப்பிட்டுள்ளார். 

சிறிது நேரத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சண்முகநாதன் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப் பட்டார். அதனைத்தொடர்ந்து நதியாவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உணவு பாதுகாப்புத் துறையினர் அந்த உணவகத்தை ஆய்வு செய்து உணவு மாதிரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இருவரின் நிலை குறித்தும், சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்து, நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகத்தையும் ஆய்வு செய்தார். மேலும், அந்த உணவகத்திற்கு சீல் வைத்து மூடுவதற்கும் உத்தரவிட்டார். அதன் படி அதிகாரிகள் உணவகத்தை மூடி சீல் வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples admitted hospital in namakkal for eat chicken rice


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->