கஞ்சா விற்பனை - திருப்பூரில் 2 பேர் கைது.!
two peoples arrested for drugs sales in tirupur
தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாட்டைத் தடுக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தங்களுக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூர் போலீசாருக்கு கஞ்சா கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் திருப்பூர் ரெயில் நிலையம் முன்புறம் நேற்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் விதமாக 2 பேர் வந்துள்ளனர்.

அவர்களைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அவர்களிடம் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேனி பெரியகுளத்தை சேர்ந்த அஜ்மல்கான், வேடசந்தூரை சேர்ந்த கன்னியப்பன் என்பது தெரியவந்தது.
மேலும், அவர்கள் இருவரும் வெளியூரில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து திருப்பூரில் விற்பனை செய்ய இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
English Summary
two peoples arrested for drugs sales in tirupur