அரசு அதிகாரியிடம் கைவரிசை காட்டிய கும்பல் - குஜராத்தில் 2 பேரை கைது செய்த போலீசார்.!
two peoples arrested for money fraud case
பெரம்பலூர் மாவட்டம் அய்யலூரை சேர்ந்த செல்வகுமாரி என்பவர், தோட்டக்கலை இயக்குநர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், "டிரேடிங் மூலம் அதிக லாபம் ஈட்டித் தருவதாக இன்ஸ்டாகிராம் செயலியில் வந்த தகவலை நம்பி, 63 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புகார் குறித்து சைபர் கிரைம் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, "குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டத்திற்கு நேரில் சென்று, ஷர்மா சுனில் குமார், ஷர்மா பன்சிலால் உள்ளிட்ட இரண்டு நபர்களை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் பணம், 4 செல்போன்கள், 5 சிம் கார்டுகள், 7 ஏ.டி.எம் கார்டுகளை கைப்பற்றினர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 2 பேரையும் குஜராத்தில் உள்ள வதோதரா நீதிமன்றத்தில் தமிழக காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
பின்னர் அவர்கள் இருவரையும் பெரம்பலூர் அழைத்து வந்து வேப்பந்தட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இரண்டு பேரையும் திருச்சி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
two peoples arrested for money fraud case