விழுப்புரம் : 7 ஆயிரம் பேரிடம் பணமோசடி - இருவர் கைது; ஆறு பேருக்கு வலைவீச்சு.!  - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. இதனை  திண்டிவனம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் வழி நடத்தி வந்தார்.

இந்த நிலையில், இந்த நிறுவனத்தில் ரூ.50ஆயிரம் செலுத்தினால் 10 மாதம் கழித்து ரூ.90 ஆயிரமும், ரூ.1 லட்சம் செலுத்தினால் 10 மாதங்கள் கழித்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரமும், ரூ.2 லட்சம் செலுத்தினால் ரூ.3 லட்சத்து 60 ஆயிரமும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனத்தினர் விளம்பரம் செய்துள்ளனர்.

இதனை உண்மை என்று நம்பி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே வேளாந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த மண்ணுலிங்கம் உள்பட மொத்தம் எட்டு பேர் சேர்ந்து கடந்த ஆண்டு ரூ.55 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளனர். 

ஆனால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பித்தராமல் அந்த நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால், முதலீடு செலுத்தியவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நிறுவனத்திற்கு சென்று பார்த்த போது அந்த நிறுவனம் பூட்டப்படடிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.

அந்த புகாரின் படி, போலீசார் அந்நிறுவனத்தை நடத்திய எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் எட்டு பேரும் சேர்ந்து சுமார் 7 ஆயிரம் பேரிடம் ரூ.85 கோடி வரை பெற்றுக்கொண்டு திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

அதன் பின்னர், போலீசார் மோசடி செய்த எட்டு பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று மோசடி செய்தவர்களில் இருவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற 6 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for money fraud to seven thousand peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->