கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டின் கொள்ளை சம்பவம் - முக்கிய குற்றவாளிகள் கைது.!! - Seithipunal
Seithipunal


கோவையில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வீட்டின் கொள்ளை சம்பவம் - முக்கிய குற்றவாளிகள் கைது.!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியகுளம் ரோடு கிரின் பீல்டு காலனியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மனைவி ராஜேஸ்வரி. வீட்டில் தனியாக வசித்து வரும், இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.

இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு ரியல் எஸ்டேட் தொழில் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிங்காநல்லூர் கிருஷ்ணா காலனியை சேர்ந்த வர்ஷினி என்ற இளம்பெண் அறிமுகம் ஆனார். 

இதையடுத்து வர்ஷினி ராஜேஸ்வரி பணம் மற்றும் நகை அதிகமாக வைத்திருப்பதை அறிந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து நாட்டு கோழி குழம்பில் மயக்க மருந்து கலந்து ராஜேஸ்வரிக்கு சாப்பிட கொடுத்துள்ளார். 

அதை சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே ராஜேஸ்வரி மயக்கமடைந்தார். அதன் பின்னர் வர்ஷினி தனது நண்பர்களை அழைத்து வந்து வீட்டில் இருந்த ரூ.2.50 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது அவர்களிடம் இருந்து 31 பவுன் நகைகள் ரூ.5 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இந்த கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான வர்ஷினி மற்றும் கார் ஓட்டுநர் நவீன்குமார் ஆகியோர் கோவைக்கு காரில் வந்து கொண்டிருப்பதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. 

அந்த தகவலையடுத்து போலீசார் ராமநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் வந்த வர்ஷினி மற்றும் ஓட்டுநர் நவீன்குமார் உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 பவுன் தங்க, வைர நகைகள், ரூ.40 லட்சம் ரொக்கம், 2 கார்கள், 4 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples arrested for robbery case in coimbvatore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->